Wednesday,February,01,2012
இலங்கை::கடந்த வாரம் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையதாக 47 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதனை நேற்று அறிவித்திருந்தனர்.
சிறைச்சாலையில் வன்முறையாக செயற்பட்டமை, உடமைகளுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன..
மகசின் சிறைக்கு புதிய அதிகாரி ஒருவரை நியமித்தமை தொடர்பிலேயே சிறை கைதிகள் தமது எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டனர்.
இதுதவிர, சிறைச்சாலையில் இருந்து கைப்பற்றப்பட்ட 6 ரி 56 ரக துப்பாக்கிகளையும், சில புகைப்படங்களையும் குற்றத் தடுப்புபிரிவினர் நிதிமன்றில் சமர்ப்பித்தனர்.
இதனிடையே தேசிய மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான சீரமைக்கப்படாத காணொளிகளை ஒளிபரப்பியிருந்தன.
குறித்த காணொளிகளை மீண்டும் ஆராயும் பட்சத்தில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் காண முடியும் எனவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், தொடர்விசாரணைகளை மேற்கொள்ளவும், அறிக்கை தாக்கல் செய்யவதற்கு நீதிமன்றம் எதிர்வரும் 28 ம் திகதிவரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

No comments:
Post a Comment