Thursday, February 2, 2012

புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை!

Thursday, February 02, 2012
மண்டபம்::இலங்கை கடற்படையினரிடம் சிக்கிய, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டணத்தைச் சேர்ந்த மீனவர்கள், நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டணத்தைச் சேர்ந்த மீனவர்கள் கவிநேசம்,19, கதிரேசன்,38, வெற்றிவேல்,18, சகாயராஜ்,19. இவர்கள், கடந்த 25ல் மீன்பிடிக்க விசைப்படகில் சென்றனர். படகு பழுதடைந்ததால், திரும்பி வரமுடியாமல் நடுக்கடலில் தவித்த போது, அவர்களை இலங்கை கடற்படையினர், 26ம் தேதி கைது செய்தனர். இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின், நால்வரும், தலைமன்னார் முகாமில் விடுதலை செய்யப்பட்டு, மண்டபத்திற்கு வந்தனர்.

No comments:

Post a Comment