Thursday, February 2, 2012

21 வருடங்களுக்குப் பின்பு: மட்டக்களப்பு அரசடியிலுள்ள பொலீஸ் காவலரண் அகற்றப்பட்டது!

Thursday, February 02, 2012
இலங்கை::மட்டக்களப்பு அரசடியிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான கட்டிடத்திலிருந்து 21 வருடங்களுக்குப் பின்பு பொலீஸ் காவலரண் அகற்றப்பட்டு அங்கிருந்த பொலீசார் வெளியேறியதையடுத்து இந்நூலகக் கட்டிடம் மட்டக்களப்பு மாநகர சபையிடம் மீண்டும் இன்று புதன்கிழமை (1.2.2012) ஒப்படைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் எடுத்த முயற்சியினால் இக் கட்டிடத்திலிருந்த பொலிஸ் காவலரண் வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றப்பட்டதுடன் அங்கிருந்த பொலிசாரும் வெளியேறினர்.

இக்கட்டிடத்திலிருந்த பொலிசார் வெளியேறியதையடுத்து மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் இந் நூலக கட்டிடத்தை இன்று பொறுப்பேற்றார்.

1990ம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ் நிலையினால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான இந்த நூலக கட்டிடத்தில் பொலிசார் பொலிஸ் காவலரண் அமைத்து அதிலிருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment