Thursday, February 02, 2012
சென்னை::முதல்வரைப் பற்றி செய்தி வெளியிட்ட விவகாரத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இந்து ஆசிரியர், நக்கீரன் கோபால் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாதி, மத பேதமில்லாமல் மக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது. அவருக்கு களங்கம் ஏற்படுத்துவகையில் ஜனவரி 7ம் தேதி வெளிவந்த நக்கீரன் வாரமிருமுறை இதழில் கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த கட்டுரையால் முதல்வருக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
எனவே, முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், மற்றும் நிருபர் உமர்முக்தாத் ஆகியோர் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நக்கீரனில் வெளிவந்த கட்டுரையை அடுத்து அந்த பத்திரிகை அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டது.
போயஸ் கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டவுடன் மயிலாப்பூர் மாபியா கார்டனுக்குள் நுழைந்துவிட்டது என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த ஆசிரியர் ராம் மற்றும் கட்டுரையின் ஆசிரியர் கோலப்பன் ஆகியோர் மீதும் முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர வக்கீல் எம்.எல்.ஜெகன் தனியாக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுக்கள் முதன்மை செஷன்ஸ் நீதிபதி கலையரசன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மார்ச் 1ம் தேதியும், இந்து ஆசிரியர் ராம் மற்றும் கட்டுரை ஆசிரியர் கோலப்பன் ஆகியோர் மார்ச் 5ம் தேதியும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment