Thursday, February 02, 2012
இலங்கை::அநுராதபுரத்தில் இம் முறை இடம்பெறவுள்ள இலங்கையின் 64வது சுதந்திர கொண்டாட்டத்திற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் நாளை மறுதினம் 4ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர தினத்திற்கான பிரதான வைபவம் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் புராதன நகரங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள சுதந்திரதின பிரதான நிகழ்வை நேரில் கண்டுகளிக்கவென ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பொலிஸாருடன் முப்படையினரும் விசேட கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள் ளனர்.
சுதந்திரதின கொண்டாட்டத்தை முன்னிட்டு அநுராதபுர நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் அலங்கரிக்கப்பட்டு ள்ளதுடன் விசேட போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மத வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுதந்திரதினத்தை முன்னிட்டு முப்படையினர் மற்றும் பொலிஸாரின் விசேட அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. இதற்கான ஒத்திகை நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேவேளை, சுதந்திரதினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியும் நாளை மறுதினம் தந்திரிமலை ஓயாமடுவ பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஐயாயிரம் பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment