Wednesday,February,01,2012
வள்ளியூர்::கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில் போராட்டக்குழுவினருக் கும், இந்து முன்னணியினருக்கும் நேற்று ஏற்பட்ட மோதலால் நெல் லையில் பிப்.4ல் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் காங்கிரஸ் பொ துக்கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் முக்கிய நகரங்களில் நடை பெறும் மின்கட்டண உயர்வு கருத் துக் கேட்புக் கூட்டத்தில் கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்தும் கருத்து கேட்கப்படுவதால் போராட்டக் குழுவினரும் கோபத்தில் உள்ளனர்.
கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர நெல்லையில் நேற்று 4ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு போராட்டக்குழுவினர் வந்த போது அவர்களுக்கும் இந்து முன்னணியினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டக்குழுவினரின் வாகனம் கல்வீசி தாக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக போராட் டக்குழு பெண்கள் இந்து முன்னணியினரை செருப்பால் அடித்தனர். இந்த சம்பவத்தையடுத்து இந்து முன்னணியைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று கலெக்டர் செல்வராஜ் அறிவித்துள்ளார். இதற்கிடையே பிப்.4ல் அணுமின்நிலையம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விரைவில் திறக்கவும் வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் பிப்.4ல் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மோதலால், பாளையில் நடைபெறும் காங்., பொதுக்கூட்டத்திற்கு உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய சம்பவத்துக்கு மத்திய அரசும், காங்கிரசும் சேர்ந்து சதி செய்து இந்து முன்னணியினரை தூண்டி விட்டது தான் காரணம் என்று போராட்டக்குழுவினர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்கு அதிரடியாக வேனில் போராட்டக்குழுவினர் வந்து மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டப்போவதாக உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் பிப். 4ல் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திற்கு வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும், இடிந்தகரை உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களிலிருந்து யாரையும் நெல்லைக்கு வரவிடாமல் தடுக்கவும் போலீசார் ஆலோ சனை செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் கூடங்குளம் அருகே கூட்டப்புளி விலக்கிலிருந்து லெவஞ்சிபுரம் வரை போராட்டக்குழுவினர் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன நடைபயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக இப்போதே அவர்கள் மீனவர் கிராமங்களில் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
போலீசார் அப்செட்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மோதல் சம்பவம் குறித்து இந்து முன்னணியினரும், போராட்டக்குழுவினரும் போலீசாரை கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் நேற்று போலீசாரும் இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. மேலும் இடிந்தகரை, கூடங்குளம் பகுதிகளில் பணிபுரியும் போலீசார் இங்கிருந்து மாறுதல் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். ஆனால் அந்த இடங்களுக்கு பணிக்கு செல்ல யாரும் தயாராக இல்லை என்றனர்.

No comments:
Post a Comment