Thursday, February 2, 2012

மதுரையில் பீகார் திருடர்கள் கைது!

Thursday, February 02, 2012
மதுரை::மதுரையில் பல இடங்களில்,"பாலீஷ்' செய்வதாகக் கூறி, நகை திருடிய பீகார் திருடர்கள் 12 பேரை, போலீசார் கைது செய்தனர்.பீகார் சோபால் மாவட்டம் சதியாபஜார் கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை, இன்ஸ்பெக்டர்கள் சுகுமாறன், புஷ்பராஜ், மலைச்சாமி, எஸ்.ஐ.,க்கள் சீனிவாசன், முருகன், கணேசன், பூங்கொடி ஆகியோரை கொண்ட தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். கடந்த சில மாதங்களாக இவர்கள், மதுரை தாசில்தார்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, நகை "பாலீஷ்' போடுவதாகக் கூறி திருட்டில் ஈடுபட்டனர். இவர்களிடமிருந்து, ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.

No comments:

Post a Comment