Thursday, February 2, 2012

சிவானந்தா தேசிய பாடசாலைக்கு ஹிஸ்புல்லாஹ்வின் நிதியுதவி!

Thursday, February 02, 2012
இலங்கை::முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் அபிவிருத்திக்கென சிறுவர் விவகார மகளிர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பாடசாலை அதிபர் கே. ரவீந்திரமூர்த்தி தெரிவித்தார்.

பாடசாலையின் ஒரு தொகுதி சுற்றுமதில் அமைப்பதற்காகவே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பாடசாலையின் வருடாந்த விளையாட்டுவிழாவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment