Tuesday, February 28, 2012

பிரித்தானியாவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து இலங்கை கேள்வி!

Tuesday, February 28, 2012
இலங்கை::பிரித்தானிய அரசாங்கத்தின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

மனித உரிமை விவகாரங்களில் பிரித்தானிய அரசாங்கத்தின் இரட்டைநிலைப்பாடு அம்பலமாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவும், அமெரிக்காவும் ஈராக்கில் மேற்கொண்டமனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனஅரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயத்துறை அமைச்சர் ஜெர்மிபிறவுணினால் இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரை தொடர்பில் இந்தக்கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரித்தானிய படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில் எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள்தொடர்பில் பிரித்தானிய கருத்துக்களை வெளியிடுவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment