Tuesday, February 28, 2012
சென்னை::தனிக் கட்சி நடத்தி போணியாகாமல், சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
1970, 80களில் முன்னணி நடிகர், இயக்குனராக இருந்த இவர் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தார். தனது படங்களில் கடும் வெயிலிலும் கூட கருப்பு, வெள்ளை, சிவப்பு பார்டர் போட்ட மப்ளர் போட்டுக் கொண்டு வந்து போவார். 'டபுள் மீனிங்கை' தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கே உண்டு.
எம்ஜிஆர் மறைந்த பின் 1989ல் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவங்கினார். ஆனால், அது கரையேறாததால் அந்தக் கட்சியை கலைத்தார். 2006ம் ஆண்டு திடீரென திமுகவில் இணைந்தார்.
தற்போது திமுகவில் பேச்சாளராக இருந்து வருகிறார். ஆனால், இவரை திமுக தனது ஆதாயத்துக்காக சும்மா பயன்படுத்திக் கொண்டதே தவிர, அவருக்கு எதையும் செய்யவில்லை.
இந் நிலையில் அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் இணைய பாக்யராஜ் விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தகவல் அனுப்பி விட்டதாகவும் அவரது அழைப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பாக்யராஜ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த விழாவே நடைபெறவில்லை.
இந் நிலையில் அவருக்கு அதிமுகவிலிருந்து எந்த நேரமும் அழைப்பு வரலாம் என்கிறார்கள்.

No comments:
Post a Comment