Wednesday, February 1, 2012

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லியில்!

Wednesday,February,01,2012
இலங்கை::இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உட்பட ஒரு குழுவினர் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக புதுடெல்லி சென்றுள்ளார்.இலங்கைக்கும் இந்தியாவுக்கும்டையில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் கடலோரப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இந்த சமுத்திரத்தில் அனைத்துலக ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இந்தியப் பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மா தலைமையிலான குழுவினருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

பாதுகாப்புச் செயலர் கோதபாயவுடன், இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் மற்றும் இராணுவ, கடற்படை, விமானப்படை அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், இந்தக் கலந்துரையாடலிகளின் போது. இந்திய பாதுகாப்புக் கல்லூரிகளிலும் ஏனைய நிறுவனங்களிலும் சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்த கலந்துரையாடப்படவுள்ளதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள இலங்கையின் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

எனினும், விரிவான தகவல்களை வெளியிட அவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயணத்தின் போது பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment