Wednesday,February,01,2012
இலங்கை::இந்தியாவுடன் கையொப்பமிடவுள்ள பொருளாதார பங்குடைமை (சீபா) ஒப்பந்தத்தை மறுபரீசீலனை செய்யவென நியமிக்கப்பட்ட குழுவிடம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட பொறுப்பை விரைவாக செய்யும்படி கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் வர்த்தகத்தை தாராளமயப்படுத்தும் நோக்கில் சீபா உடன்படிக்கை 2008 இல் கையொப்பம் இடப்படவிருந்தது. இருப்பினும் உள்நாட்டு கைத்தொழில் மற்றும் வர்த்தக முயற்சியாளர்கள் உட்பட சில தரப்பினரின் எதிர்ப்புக் காரணமாக இது நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் இந்த பிரச்சினையை ஆராயவென அரசாங்கம் ஒரு குழுவை கடந்த வருட நடுப்பகுதியில் நியமித்தது. அக்குழு இப்போது தொழிற்பட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை கையொப்பமிடுவதன் மூலம் இலங்கை இந்தியாவுடன் வர்த்தகத்தை மேம்படுத்துவது அவசியமானது என பிரபல பொருளியலாளரான பேராசிரியர் நோகன் சமரஜீவ அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் இந்தியாவின் வளர்ச்சியை இலங்கை பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் கூறினார். ஐ.தே.க இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளபோதும் ஜே.வி.பி போன்ற கட்சிகள் இந்த ஒப்பந்தத்தை விரும்பவில்லை. இந்திய உற்பத்திகள் இலங்கையில் வந்து குவியும் போது உள்நாட்டு உற்பத்திகள் பாதிக்கப்படும் என அவை கருதுகின்றன.

No comments:
Post a Comment