Wednesday,February,01,2012
இலங்கை::அரசியல்வாதிகள் மற்றும் தமது உறவினர்கள் மீது தாக்குதல்நடத்தப்படுவதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா தடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.
தமிழகத்திற்கு செல்லும் தமது உறவினர்களும், அரசியல் பிரமுகர்களும் தாக்குதலுக்கு இலக்காகி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கையை மாநில அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் மைத்துனர் திருக்குமார் நடேசன் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து சர்வதேச ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நடேசன், தெற்கைச் சேர்ந்தவர் அல்ல எனவும், வடக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கைப் பொருட்கள் விற்பனை செய்வது கூட தடைசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment