Wednesday,February,01,2012
ஆம்பூர்::ஆம்பூர் அருகே ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீ காரணமாக சொகுசு பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. பஸ்சில் புகை வருவதாக பைக்கில் சென்ற வாலிபர்கள் எச்சரித்ததால் அதில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 27 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை கோயம்பேடு ஓமனி தெருவை சேர்ந்தவர் நூருல்லா. இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று காலை இவருக்கு சொந்தமான சொகுசு (வால்வோ) ஏசி பஸ் சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்டது. சுமார் 10 மணியளவில் புறப்பட்ட பஸ்சில் 3 பெண்கள் உள்பட 27 பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென பஸ்சில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அனைத்து பயணிகளும் அந்த பஸ்சிலிருந்து இறங்கினர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு மாற்று பஸ் வரவழைக்கப்பட்டது. பஸ்சை முகமது ரபி(46) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் ஆம்பூர் அடுத்த வெங்கிளி அருகே சுமார் 3.10 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது வேகமாக பைக்கில் வந்த இரு வாலிபர்கள் பஸ்சை ஓவர்டேக் செய்து பஸ்சின் பின்பக்கத்தில் இருந்து அதிக புகை வருவதாக டிரைவர் ரபீக்கிற்கு சைகை மூலம் தெரிவித்தனர். இதனால் உடனடியாக டிரைவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார். அப்போது, பஸ்சின் பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்தவர்கள் பின்பக்கம் தீப்பிடித்திருப்பதாக அலறியபடி ஓடி வந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் தங்களது கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு வேகமாக கூச்சலிட்டபடி கீழே இறங்கினர். வேகமாக காற்று வீசியதால் பஸ் முழுவதும் தீ பரவியது. தாங்கள் கொண்டு வந்த பொருட்கள் தங்கள் கண் முன்னே எரிவதை கண்ட பயணிகள் அதிர்ச்சியுடன் திகைத்தபடி நின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்பூர் டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த ஆம்பூர், வாணியம்பாடி தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். லேசாக எரிந்துக் கொண்டிருந்த தீ மீண்டும் டயர்களை பற்றியதால் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் டீசல் டேங்க் சூடேறி டீசல் ஒழுக தொடங்கியது. டீசல் விழுந்த இடத்தில் மீண்டும் தீ எரிய தொடங்கியது. மீண்டும் வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 6 லேப்டாப், பெங்களூரை சேர்ந்த சந்திரசேகரன் தனது மகன் திருமணத்திற்காக சென்னையில் வாங்கிய ரூ.75 ஆயிரம் மதிப்பிலான திருமண உடைகள், ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பட்டுப்பு டவைகள் எரிந்து நாசமானது. பஸ்சின் பின்பக்க ஏசியில் இருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது

No comments:
Post a Comment