Wednesday,February,01,2012
இலங்கை::வெலிக்கடை மகசின் சிறைச்சாலையை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவானிடம் முன்வைத்தை கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்..
மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் அண்மைக்காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததாக நினைவுகூர்ந்தே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
எனினும், தாம் அதனை ஆராயவேண்டிய அவசியம் இல்லை என கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் பிரஹர்ஷா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
காவல்துறையினருக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தகுதியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் காரணமாக அரச உடைமைகளுக்கு 47 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டது..
சிறைச்சாலை அதிகாரி மற்றும் சிறைசாலை ஊழியர் உட்பட நான்கு பேர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, கலவரம் தொடர்பாக 27 பேரிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment