Wednesday, February 1, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி என்பது அரசியல் பரத்தைகளை (விலைமாதுக்களை) கொண்ட கட்சியாகும்-சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர!

Wednesday,February,01,2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி என்பது அரசியல் பரத்தைகளை (விலைமாதுக்களை) கொண்ட கட்சியாகும்.இவர்கள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு கோரவில்லை என சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர விமர்சித்துள்ளார்.தேசிய இயக்கங்களினால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டின் உள்விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்ய முடியாது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இந்தியாவிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றத் தேவையில்லை.

காணி, பொலிஸ் உள்ளிட்ட பல அதிகாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோருகின்றனர். கடந்த காலங்களில் இவர்கள் புலிகளை ஆராதித்தார்கள். புலிகள் கொலைகளை மேற்கொண்ட மௌனம் காத்தனர்.

அதிகாரம் மற்றும் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான நோக்கம். வடக்கு மக்களின் மீன் வளத்தை இந்திய மீனவர்கள் கொள்ளையிடுகின்றனர். இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவித கருத்துக்களையும் வெளியிடுவதில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் சவூதி அரேபியாவிற்கு எதிராக எதனையும் குறிப்பிடமாட்டார்கள். அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு எதிராக கருத்து வெளியிட மாட்டார்கள். அதேபோன்று ரணில் விக்ரமசிங்கவும் இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இந்திய படையினர் இலங்கை மக்களை கொன்று குவித்த போது அமெரிக்கா மனித உரிமை மீறல் குறித்து குரல் கொடுக்கவில்லை. புலிகளின் குண்டுத் தாக்குதல்களில் பலர் உயிரிழந்த போது அமெரிக்கா மனித உரிமை மீறல்கள் குறித்து எதனையும் குறிப்பிடவில்லை.

இந்த சூழ்நிலையில், அரசாங்கம் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றது. பொதுநலவாய நாடுகள் போட்டிகளை நடத்துவதற்காக 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டமை, கூடுதலான அமைச்சர்களை நியமித்தல் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.

எனினும், நாடு என்ற ரீதியில் வெளிச் சக்திகளின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என எஸ்.எல்.குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment