Tuesday, February 28, 2012
இலங்கை::இலங்கையர் உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களின் எண்ணம் முழுதும் தாய்நாட்டின் மீதே உள்ளது” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு நாலந்தா கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி அவர்களுடன் அமெரிக்காவில் வாழும் நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் செய்மதியூடாக கலந்துரையாடினர். இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நாலந்தா கல்லூரியின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக மாணவர்களுக்கு கையளித்தார். கணனி ஆய்வு கூடம், சர்வதேச கற்கைக்கான சர்வதேச நிலையம், ஆரம்ப பாடசாலைக்கான மாடிக் கட்டிடம் மற்றும் மீள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் ஆகியன இதில் உள்ளடங்குகின்றன.
கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, நாலந்தாக் கல்லூரியின் பழைய மாணவரான பாராளுன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று நாலந்தாக் கல்லூரிக்கு வருகை தந்தபோது அவருக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. மாணவர் படையணிகளின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதுடன் அதனையடுத்து அவர் கல்லூரி வளவிலுள்ள படைவீரர்களின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
புனரமைக்கப்பட்ட கல்லூரி விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த ஜனாதிபதி கணனி ஆய்வுகூடம் மற்றும் தகவல் தொடர்பாடல் நிலையங்களை ஆரம்பித்துவைத்தார். இதற்கான நிதியுதவியினை கல்லூரியின் பழைய மாணவர்கள் வழங்கியுள்ளனர். அவர்கள் மத்தியில் கலந்துரையாடிய ஜனாதிபதி; எதிர்கால சந்ததியினரை அறிவில் கட்டியெழுப்பும் சந்தர்ப்பமாக இதனைக் கருதுவதாகவும் இச் செயலைப் பாராட்டியதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் பந்துல குணவர்தன இந்நிகழ்வில் சிறப்புரையாற்றியதுடன் கல்லூரி அதிபரினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment