Tuesday, February 28, 2012
சென்னை::கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு, ஜெர்மனியில் இருந்து நிதி பெற்றுத் தந்தவர், ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டார். கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தன்னார்வத் தொண்டு அமைப்புகள், உதயகுமார் தலைமையில், போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த அமைப்புகளுக்கு, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்து, அதிகளவில் நிதி, பல்வேறு வகையில் வந்து சேர்வதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி ரெய்டு நடத்தியது.
சமீபத்தில், பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்காவில் உள்ள தன்னார்வ அமைப்புகள், இங்குள்ளவர்களுக்கு நிதி அனுப்புவதாக தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, மூன்று தன்னார்வ அமைப்புகளின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டன.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வருவது, அந்த நிதியை எந்த வகையில் பயன்படுத்துகின்றன என்பது தொடர்பாக, மத்திய உளவுப்பிரிவினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக கியூ பிரிவு போலீசாருக்கும், இந்த அமைப்புகளை கண்காணிக்கும் அதிகாரம், சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து தமிழகத்திற்கு நிதியை வாங்கி அளிக்கும் ஏஜன்டாக செயல்பட்டு வரும், ஜெர்மனியைச் சேர்ந்த சோன்டேக் ரெய்னர் ஹெர்மன்,50, என்பவர், நாகர்கோவிலில் உள்ள கங்கா லாட்ஜில் தங்கியிருப்பதாகவும், அவர் இயற்கை அறக்கட்டளை என்ற பெயரில், தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் லால்மோகன் என்பவருடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், மத்திய உளவுப் பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கியூ பிரிவு போலீசார், கங்கா லாட்ஜில் ரெய்னர் ஹெர்மன் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர்.
அந்த அறையில், நிதி ஆதாரங்கள் குறித்த தகவல்கள், நிதியை இந்த அமைப்புகளுக்கு அளித்த தகவல்கள் உள்ளிட்டவை சிக்கின. இதைத் தொடர்ந்து, ரெய்னரை விசாரித்த போலீசார், அவரை மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பியனுப்பியுள்ளனர்.

No comments:
Post a Comment