Thursday, February 2, 2012

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வு திட்டம்வழங்கப்பட்டால் ஆளும் கட்சியிலிருந்து விலக நேரிடும்-விமல் வீரவன்ச!

Thursday, February 02, 2012
இலங்கை::13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வு திட்டம்வழங்கப்பட்டால் ஆளும் கட்சியிலிருந்து விலக நேரிடும்-விமல் வீரவன்ச:-

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தைஅரசாங்கம் வழங்கினால் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற நேரிடும் என ஜே.என்.பி கட்சியின்தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதித் தீர்மானத்திற்கு அமைய எதிர்காலஅரசியல் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கோரிக்கைகளை நாடு கடந்ததமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரினிடம் முன்வைக்க வேண்டுமென அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

காவல்துறை அதிகாரங்களை பகிரக் கூடாது என்பதே தமது கட்சியின்நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment