Thursday, February 02, 2012
திருநெல்வேலி::கூடங்குளம் அணு உலை ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பாக போராட்டக் குழுவினர் 25 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலை தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள குழுவினருடன் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆதரவாளர்களுடன் வந்தனர்.
இதேபோல் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கும் இந்துமுன்னணியினரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
இருதரப்பினருக்கும் இடையே வாய்தகராறில் தொடங்கிய மோதல் வன்முறையாக வெடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்து முன்னனியை சேர்ந்த உடையார் என்பவர் கொடுத்த புகாரில் பேரில் கூடங்குளம் எதிர்ப்பு குழுவைச் சேர்ந்த புஷ்பராயன் உட்பட 25 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கூடங்குளம் போராட்டக் குழுவினரும் கைது செய்யப்படக்கூடும் எனத் தெரிகிறது.

No comments:
Post a Comment