Thursday, February 02, 2012
இலங்கை::நாட்டில் வாழும் சாதாரண மக்களுக்கு 13ஆம் திருத்தச் சட்டத்தை தாண்டிய தீர்வுத் திட்டம் ஓர் பிரச்சினையல்ல என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.வடக்கிலும் தெற்கிலும் வாழும் சாதாரண மக்களுக்கு 13 பிளஸ் பற்றிக் கவலையில்லை. வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளே 13 பிளஸினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் பிரதேச பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் கருமமாற்ற இடமளிப்பதனை சிங்களவர்கள் எதிர்க்கவில்லை. நாட்டின் சில அரசியல்வாதிகளே இதனை எதிர்க்கின்றனர்.
வடக்கில் விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களில், விவசாயம் செய்ய மக்களுக்கு அனுமதி அளிப்பதனை தெற்கு விவசாயிகள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடாது என்பதே சாதாரண மக்களின் பிரதான நோக்கம்.
வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளிட்ட இந்த நாட்டின் சாதாரண மக்களுக்கு 13 பிளஸை விடவும் வேறும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment