Sunday, January 29, 2012

பிலிப்பைன்ஸின் நிவாரணப் பணிகளுக்கு இலங்கை நிதியுதவி!

Sunday, January 29, 2012
இலங்கை::பிலிப்பைன்ஸில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் நிவாரண பணிகளுக்காக இலங்கை 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் நாவலகே பெனடிக் குரேயினால் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிவாரண தொகையினை அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பெற்றுக் கொண்டார்.

பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் ஆயிரத்திற்கும் அதிகமான பிலிப்பைன்ஸ் பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment