Sunday, January 29, 2012

முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு கருணாநிதி, காங். தான் காரணம்:ஓ.பன்னீர் செல்வம்! ராமநாதபுரத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:முன் கவுன்சிலருக்கு தர்ம அடி!

Sunday, January 29, 2012
ராமநாதபுரம்::முல்லைப் பெரியாறு அணை பிரச்னை இந்த அளவுக்கு வரக்காரணம், கருணாநிதியும், காங்கிரசும் தான்,'' என, ராமநாதபுரத்தில் நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அவர் பேசியதாவது: உள்ளாட்சியில் மக்கள் பணி என்பது, வருங்காலத்தில் அரசியல் பணிக்கு அடித்தளம். மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், "முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது,' என அறிக்கை கொடுத்த பின்பும், கேரள அரசு, நீர்மட்டத்தை குறைத்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கூடாது, என தீர்ப்பு வாங்கித்தந்தவர் ஜெயலலிதா. ஆயினும் அதன் 142 அடி உயரத்தை 136 அடியாக குறைத்துள்ளனர். ஒரு மாநிலத்துக்குள்ளே பிரச்னை என்றால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, அந்த மாநிலமே ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை என்றால், மத்திய அரசு தான் அதை அமல்படுத்த வேண்டும்.
ஆனால் 2006ல் ஆட்சியில் இருந்த காங்., மற்றும் கருணாநிதி, இந்த தீர்ப்பை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் முல்லை பெரியாறு பிரச்னை இந்த அளவுக்கு நீடித்துள்ளது. தமிழக முதல்வர் பிறந்த நாளில், ஆடம்பர விழாக்களை தவிர்த்து, கல்வி, மருத்துவ, இலவச திருமண உதவிகளை செய்யுங்கள். சலசலப்பு என்பது எல்லா கட்சியிலும் உள்ளது. கலகம் பிறந்தால்தான் நல்லது நடக்கும். எனவே கலகம் செய்தவர்கள் மீண்டும் சேர வேண்டும், என்றார்.

ராமநாதபுரத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:முன் கவுன்சிலருக்கு தர்ம அடி!

ராமநாதபுரம்::ராமநாதபுரத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில், ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் செல்வத்திற்கு தர்ம அடி விழுந்தது. ராமநாதபுரத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச துவங்கிய போது, மேடையின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த ராமநாதபுரம் ஒன்றிய எட்டாவது வார்டு கவுன்சிலர் செல்வத்தை, தொண்டர்கள் சிலர் திடீரென இழுத்து தாக்கினர்.

சரமாரியாக அடி விழுந்தது. செல்வத்தின் சட்டை கிழிந்தது. இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் அங்குமிங்கும் ஓடினர். சிலர் நாற்காலிகளை தூக்கி வீசினர். டி.எஸ்.பி., முரளீதரன் தலைமையில் போலீசார் அடிதடியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர். தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியபடி செல்வம், அமைச்சரை நோக்கி சென்றார். இதனால் மீண்டும் பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது.கூட்டத்தில் நின்றவர்கள் செல்வத்தை வெளியே அழைத்து சென்றனர்.

தகராறுக்கு காரணம்: உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் ஒன்றியம் 8 வது வார்டில் செல்வம் போட்டியிட்டபோது, அவருக்கும், பசும்பொன் நகரை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக செல்வம் மீது தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். தகராறு நடந்த போது அமைச்சர் பன்னீர் செல்வம் தகராறு செய்தவர்களை விலக்கி விடாமல், வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார்.

பின்னர் அமைச்சர் பேசுகையில்,""சலசலப்பு என்பது எல்லா கட்சியிலும் உள்ளது. கலகம் பிறந்தால்தான் நல்லது நடக்கும். எனவே கலகம் செய்தவர்கள் மீண்டும் சேர வேண்டும், என்றார்.கூட்டம் முடிந்தபின், "தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சரிடம், செல்வம் மனு கொடுத்தார். மனு வாங்கிக்கொண்ட பன்னீர் செல்வம் எதுவும் கூறாமல் காரில் ஏறிச்சென்றார். தனது சங்கிலி, மொபைல்போன், பணம் ஆகியவை காணாமல் போனதாக செல்வம் புலம்பியது தனிக்கதை..
div>

No comments:

Post a Comment