Sunday, January 29, 2012

சவேந்திர சில்வா ஆசியாவின் தெரிவு-மாட்டின் நெசக்கி!

Sunday, January 29, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகளின் ஆசிய பிராந்தியத்திற்கான குழு தலைவராக, ஐக்கிய நாடுகளின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி சவேந்திர சில்வாவினை நியமித்தது செயலாளர் நாயகம் பான்கீ மூன் அல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், செயலாளரின் ஊடக பேச்சாளர் மாட்டின் நெசக்கி இந்த தகவலை வெளியிட்டார்.

இன்ன சிட்டி பிரஸ் செய்தி ஸ்தாபனத்தைச் சேர்ந்த மெத்தியூஸ் என்பவர் எழுப்பிய கேள்விகே அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

இதன் காரணமாக அவர் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையணின் விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மாட்டின் நெசக்கி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையணியை பணியில் அமர்த்துவது குறித்து செயலாளர் நாயகம் பேக்கீ மூனுக்கு, சவேந்திர சில்வா ஆலோசனைகளை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆசிய பசுபிக் பிராந்திய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான தகைமையை சவேந்திர சில்வா கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment