Sunday, January 29, 2012
கடலூர்::தேர்தல் தொடர்பாக, முதல்வர் ஜெ., மீது போடப்பட்ட பிடிவாரன்டை, கடலூர் செஷன்ஸ் கோர்ட், நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது.தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2001ம் ஆண்டு, சட்டசபைத் தேர்தலில் விதிமுறை மீறி, புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிபட்டி தொகுதிகளில் போட்டியிட்டதாக, புவனகிரி தேர்தல் அதிகாரி செல்வமணி, போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், முதல்வர் ஜெ., மீது பரங்கிப்பேட்டை கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட்டில், ஜெ., தடை உத்தரவு பெற்றார். இதற்கிடையே, கடந்த 4ம் தேதி, பரங்கிப்பேட்டை கோர்ட்டில், ஜெ., மீதான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில், மாஜிஸ்திரேட் கோமதி, ஏற்கனவே போடப்பட்ட பிடிவாரன்டை, ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த பிடிவாரன்டை சமர்ப்பிப்பதற்கு தடையாணை கோரி, கடலூர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், திண்டிவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கரன் மனுத்தாக்கல் செய்தார். கடந்த 5ம் தேதி, இம் மனு மீதான விசாரணை நடந்தது.அதில், ஜெ., மீது போடப்பட்ட பிடிவாரன்ட் சம்மன் சமர்ப்பிக்க தடையாணை பிறப்பித்து, நீதிபதி உத்திராபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை, 28ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். நேற்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், ஜெ., தரப்பில் வழக்கறிஞர்கள் சங்கரன், அருண்மொழிவர்மன், சங்கர் வாதிட்டனர். வாதங்களைக் கேட்ட நீதிபதி உத்திராபதி, முதல்வர் ஜெ.,வுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.***

No comments:
Post a Comment