Monday, January 30, 2012

அதிகாரப்பரவலாக்கல் பட்டியலிலிருந்து பொலிஸ்,காணி அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி இணங்க மாட்டார் - ஜாதிக ஹெலஉறுமய!

Monday, January 30, 2012
இலங்கை::அதிகாரப்பரவலாக்கல் பட்டியலிலிருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கக்கோரி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிடம் எமது உறுதியான யோசனையை முன்வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று ஜாதிக ஹெலஉறுமய நேற்றுத் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகின்றோம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் கருத்துவெளியிடும் போதே ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளரும் மேல்மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்வில தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்திடம் தூக்கிப்பிடித்து வருவதால் பயன் கிட்டப்போவதில்லை.

எமது நாட்டு மக்களின் பிரச்சினைகளை நாமே பேசித் தீர்க்க வேண்டும். இதற்கு முன்வரத் தயங்குபவர்கள் தமிழர்கள் நலனில் அக்கறை கொள்வது போல் நடிக்கின்றனர்.

தமிழ் மக்களை ஏனைய சமூகத்தினருடன் இணையவிடாது தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.

நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகமிழைக்கும் வகையிலேயே அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தமிழ் மக்களுக்கு விடிவைத் தேடிக்கொடுப்பதற்கு அவர்கள் விரும்பினால் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கலாம் அல்லவா?

காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்கமாட்டார் என நாம் உறுதியாக நம்புகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment