Monday, January 30, 2012
இலங்கை::இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்படவிருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி களுடைய பெயர்களின் பரிந்துரைக்காக அரசாங்கம் காத்திருப்பதாக ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேயசிங்க நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பிரதிநிதிகளின் பெயர்களைப் பரிந்துரைக் குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அரசாங்கத் தரப்பில் நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். இதுவரை அவர்களி டமிருந்த எந்தவிதமான பதில்களும் அளிக்கப்படவில்லை.
அவர்களுடைய பெயர்களின் பரிந்துரைக்காக நாம் காத்திருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினருமான ரஜீவ விஜேசிங்க தினகரனுக்குத் தெரிவித்தார்.
தெரிவுக்குழுவுக்கான பெயர்களை அவர்கள் பரிந்துரைத்ததும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடரும். இது நிபந்தனையல்ல, எனினும், அவர்களின் பரிந்துரைக்காக நாம் காத்திருக்கின்றோம் என்று குறிப்பிட்ட அவர், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதிகள் இதுவரை இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை யென்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்வதேசத்தின் மத்தியஸ்தம் தேவையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்துக் கருத்துத் தெரிவித்த ரஜீவ விஜேசிங்க, இந்தக் கருத்து சுரேஷ் பிரேமச்சந்திரனுடைய சொந்தக் கருத்தாகவே இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுவான கருத்து இதுவாக இருக்கும் என நான் கருதவில்லை என்றார்.
அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சாதகமாக நோக்குவதாக ஊடங்களில் வெளியாகும் செய்திகள் மூலம் எம்மால் அறியக் கூடியதாக உள்ளது என்றும் ஆளும்தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment