Monday, January 30, 2012

இரு நாட்டு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றுகின்றது-அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்!

Monday, January 30, 2012
இலங்கை::இரு நாட்டு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றிவருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் சகல இன மக்களையும் ஐக்கியப்படுத்தும் முனைப்புக்களில ;அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பத்தாண்டு கால மும்மொழிக் கொள்கையின் ஊடாக பாரிய மாற்றங்களைஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டில் இயங்கி வரும்அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு நாட்டு கொள்கைகளை பின்பற்றி வருகின்றது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கள கடும்போக்குடைய கட்சிகள் சிறுபான்மை மக்கள் தங்களது ஆதிக்கத்தின் கீழ் வாழ வேண்டுமென எதிர்பார்க்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழங்குவதனை சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே கடும்போக்குடைய சிங்கள கட்சிகள் இருக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாடு அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment