Monday, January 30, 2012
சென்னை::தமிழக மீனவர்களை காக்கும் வகையில் மீனவர் பாதுகாப்பு படைப்பிரிவை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கி.வீரமணி கூறியுள்ளார். இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டு மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலிலேதான் உள்ளது. அந்த தொழிலைத்தவிர அவர்களுக்கு வேறு தொழில் ஏதும் தெரியவே தெரியாது. தங்கள் வாழ்க்கையை அன்றாடம் ஆபத்துக்குரியதாகவும், இயற்கையின் கொடுமைகளால் பாதிக்கப்பட கூடியதாகவும் இருந்தாலும் துணிந்து கடல் மேல் வாழ்கிறார்கள்.
கச்சதீவை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்களுக்குரிய தொழில் அடிப்படை உரிமையை காப்பாற்ற போதிய ஏற்பாடுகளையும் அசட்டையின்றி செய்ய மத்திய அரசு முன் வருதல் வேண்டும்.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து தந்தது சட்டப்படி செல்லாது என்ற சட்டப்பிரச்சினை அடிப்படையில் திராவிடர் கழகம் போட்ட ரிட் மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது. நமது முதல்-அமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கச்சத்தீவு வழக்கும் நிலுவையில் முழுமையான விசாரணைக்கு வராமல் உள்ளது.
சட்டப்படி, மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பு தர வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பும் சில சில நேரங்களில்தான் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் செயல்படுத்தப்படுகிறது.
இது மேலும் பலப்படுத்தப்பட்டு கடலோர காவல் படையில் `மீனவர் பாதுகாப்பு படைப்பிரிவு' என்ற ஒன்று தனியே அமைத்து 24 மணி நேரமும் ரோந்திலேயே இருக்கும்படி கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளும், அமைப்புகளும், முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் இணைந்து, ஒன்றுபட்டு ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி, அதில் குறுக்குசால் ஓட்டப்படாத ஒருமித்த தீர்மானம்-முடிவு ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment