Monday, January 30, 2012

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை கோரும் பிரேரணை நிறைவேற்றம்!

Monday, January 30, 2012
இலங்கை::மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை கோரி கிழக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாண சபைக் கூட்டத்தின் போது அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக இந்தப் பிரேரணைகக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண காணி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

காணிகள் தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மாகாண சபைகளுக்கு ஓரளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தில் நிலவுகின்றன காணிப் பிரச்சினைகளை ஆராய்ந்து அது குறித்து மிக நெருக்கமாக செயற்படக்கூடிய தன்மை மாகாண சபைக்கு இருப்பதாக கிழக்கு மாகாண காணி அமைச்சர் கூறியுள்ளார்.

இதன் பொருட்டு, ஓரளவான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய காணிக் கொள்கை குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமே காணப்பட வேணடும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment