Monday, January 30, 2012

தமிழக சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க வெளிநடப்பு!

Monday, January 30, 2012
சென்னை::தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் முதல் நாளான இன்று தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தானே புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப்பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டி ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக கூறி ஸ்டானின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரைக்கு முன் ஸ்டாலின் பேச முயன்றதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

No comments:

Post a Comment