Monday, January 30, 2012
இலங்கை::வெளிநாடுகளுக்கு சென்று தாய் நாட்டை காட்டிக் கொடுப்பதற்காக ஒரு சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்ற போதிலும், சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் சுதந்திர இலங்கையை பாதுகாப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை நீர்வழங்கல் திட்டத்தை மக்களுக்காக திறந்து வைக்கும் பொருட்டு கல்லேல்ல நீர்வழங்கல் நிலையத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார்.
இலங்கையில் உருவாகியுள்ள அமைதி சூழ்நிலையில் வடக்கு - கிழக்கு, மேற்கு, தெற்கு, மலையகம் என்ற ரீதியில் பிரிந்து செல்லாது இலங்கையர் என ஒன்றிணைந்து இன்று மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
30 வருடங்களாக அபிவிருத்தியைக் காணாத பிரதேசங்கள் கூட அபிவிருத்தி செய்யப்பட்டு, நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தியை மேற்கொள்ளும் செயற்றிட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அரசியல் பேதங்களை புறந்தள்ளி அனைவரும் ஒன்றாக கைகோர்த்து முன்னோக்கி பயணிக்கின்ற காலம் மலர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்...
தேசிய பிரச்சினை தொடர்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முடிவு!
நாட்டில் நிலவும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பாராளுமன்றில் அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்து கலந்தாலோசித்த பின்னரே தீர்வுகள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இந்தியாவுடன் தான் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் மாத்திரமே உரையாடியதாகவும் தீர்வுத் திட்டம் தெரிவுக் குழுவின் மூலமே முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment