Monday, January 30, 2012
இலங்கை::மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.
மிகவும் சிறிய இந்த அழகிய தேசத்திற்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமற்றவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்திலுள்ள நாமல் ஓயா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நெல்சிப் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை தொடக்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலத்தில் மக்கள் சொல்லொண்ணா துன்ப, துயரங்களை அனுபவித்தார்கள்.
ஒவ்வொரு வினாடியுமே அச்சம், பீதியுடனேயே கழிந்து கொண்டிருந்தது. இந்த நிலமை ஓரிரு நாட்களோ, வாரங்களோ நிலவவில்லை. மாறாக மூன்று தசாப்த காலம் இந்த துரதிஷ்டகரமான நிலமை நீடித்தது.
இந்த நிலமையிலிருந்து நாட்டை விடுவித்து இங்கு வாழுகின்ற எல்லா மக்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்.
இப்போது நாம் அச்சம், பீதியின்றி சந்தோஷமாக வாழுகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் ஓரிருவர் தங்களது அரசியல் நலன்களுக்காக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். இது இந்தச் சின்னஞ்சிறிய தேசத்திற்கு தேவையற்றதாகும்.
இவ்வாறான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் தற்போது ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் வீண் ஐயங்களையும், பிரிவுகளையும் ஏற்படுத்தும். ஒருவர் மீது அடுத்தவர் அதிகாரம் செலுத்தும் நிலமை உருவாகும்.
இந்த நிலமை நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய முயற்சி செய்யும் வெளிநாட்டுச் சக்திகளுக்குத் தான் நன்மையாக இருக்குமேயொழிய எமது மக்களுக்கு எந்தப் பயனுமே கிடைக்கப் போவதில்லை.
ஆகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வோம் என்றார்.

No comments:
Post a Comment