Saturday, January 28, 2012
இலங்கை::சர்வதேச பயங்கரவாதம், கடற்கொள்ளை, கணனி தொடர்பிலான குற்றங்கள், காலநிலை மாற்றத்தின் விளைவுகள், புலமைச் சொத்துடைமை உரிமைகள், உலக வர்த்தக அமைப்பு சார் பிரச்சினைகள் போன்றவற்றில் எதிர்நோக்கும் சவால்களுக்கு ஆசிய, ஆபிரிக்க நாடுகள் முகங்கொடுக்க வேண்டிய கால கட்டம் தோன்றியுள்ளதாக நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் புது டில்லியில் தெரிவித்தார்
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் புதுடில்லி மாநாட்டில் பிரதான உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் தற்போதைய தலைவரான ரவூப் ஹக்கீம் அதன் தலைமையகம் அமைந்துள்ள புதுடில்லியில் நடைபெற்ற முக்கிய மாநாடு மற்றும் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அதன் செயலாளர் நாயகம் பேராசிரியர் ரஹ்மத் முஹம்மதின் அழைப்பின் பேரில் கடந்த 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
நீதியமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்தாவது;
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பு இவ்விரு கண்டங்களையும் சேர்ந்த அங்கத்துவ நாடுகளின் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகி அவற்றை சுமூகமாக தீர்த்து வைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. கடல்சார் (சமுத்திர) சட்டம், நாடற்றோர் மற்றும் அகதிகளைக் கையாள்வது தொடர்பான பெங்கொக் மூலாதாரங்கள், பெண்களையும், சிறுவர்களையும் சட்ட விரோதமாக நாட்டுக்கு நாடு களவாக கடத்திச் செல்லுதல் போன்ற முக்கிய விவகாரங்களைப் பொறுத்தவரை இந்த அமைப்பு நிறைய சாதித்துள்ளது.
இவ்வமைப்பின் ஐம்பதாவது வருடாந்த செயலமர்வு சென்ற ஆண்டு ஜூன் மாதம் கொழும்பில் நடைபெற்ற பொழுது அதன் தலைமைப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை இவ்வமைப்பின் ஏழு ஸ்தாபக நாடுகளில் ஒன்றாகும். பிரஸ்தாப அமைப்பின் முக்கிய பிரமுகர் அமைப்பின் தலைமைப் பொறுப்பும் எம்மைச் சார்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்" என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் உலக விவகாரங்களுக்கான இந்திய மன்றம், புதுடில்லியில் பிரசித்தி பெற்ற சப்ரு இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த விஷேட கருத்தரங்கில் 'பாதுகாப்பதற்கான உரிமைகள் - ஆசிய, ஆபிரிக்க கண்ணோட்டம்' என்ற தொனிப்பொருளில் இலங்கை நீதியமைச்சர் ஹக்கீம் ஆற்றிய நீண்ட உரை அனைவரதும் பாராட்டைப் பெற்றது. அதில் அங்குள்ள கல்விமான்களும் புத்திஜீவிகளும் பெருமளவில் பங்குபற்றினர்.

No comments:
Post a Comment