Saturday, January 28, 2012

ஐ.நா விசேட குழுவின் ஆலோசகராக ஷவேந்திர சில்வா நியமனம்!

Saturday, January 28, 2012
இலங்கை::அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகள் மற்றும் அது தொடர்பான விடயங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் உருவாக்கப்பட்ட விசேட குழுவினால் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என நிபுணர் குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள இவரை, அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான சிரேஷ்ட ஆலோசனைக் குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போது ஊடகவியராளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் உண்மையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதா? என்பதனை தாம் அறிந்துகொள்ள விரும்புவதாகவும், ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளரிடம் குறித்த ஊடகவியலாளர் மற்றுமொரு கேள்வியையும் எழுப்பினார்.

தாம் அறிந்த வகையில் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் குழுவினாலேயே ஷவேந்திர சில்வா தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் செயலாளர் நாயகத்தினால் தெரிவுசெய்யப்படவில்லை எனவும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் மார்டின் நெசர்கி பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment