Saturday, January 28, 2012

இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் உதவி வேண்டும்: மன்மோகன் சிங்!

Saturday, January 28, 2012
புதுடெல்லி::பிரதமர் மன்மோகன் சிங் இன்று கேரிசன் அணிவகுப்பு மைதானத்தில் தேசிய மாணவர் படையின் (என்.சி.சி) ஆண்டு விழாவில் பங்கேற்றார். 17 தலைமையகங்கள் சார்பில் பங்கேற்ற மாணவர் படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் பின்னர் உரையாற்றியபோது: இந்திய இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். அவர்களுக்கு சரியான சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டால் நிச்சயமாக சாதிப்பார்கள்.

நாட்டின் பல்வேறு துறைகளில் இளைஞர்களுடைய படைப்பாற்றல், சக்தி மற்றும் சுறுசுறுப்பு நாட்டிற்கு மிக அவசியம். கடந்த வருடம் நடந்த மும்பை குண்டு வெடிப்பின் போதும், நிலநடுக்கத்தின் போதும் என்.சி.சி மாணவர்கள் விலைமதிப்பிட முடியாத அளவுக்கு உதவி செய்துள்ளதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட பல சுதந்திர போராட்ட வீரர்கள் என்.சி.சி.யில் இருந்தவர்கள் என்ற பெருமை உள்ளது என கூறினார். மேலும், பிற நாடுகளில் இருந்து கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இந்தியாவிலிருந்து நட்பு, அன்பு மற்றும் சமாதான செய்திகளை அவர்கள் நாட்டிற்கு தூதாக எடுத்துச் செல்லுமாறு கூறினார்.

No comments:

Post a Comment