Saturday, January 28, 2012
தாகா::வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இந்திய மீனவர்கள் மீது வங்கதேச கடற்கொள்ளையர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் இறந்தனர். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர். படகுகளுடன் 12 மீனவர்கள் கடத்தப்பட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த மீனவர்கள், வங்க கடலில் நேற்றிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வங்கதேச கடற்கொள்ளை கும்பல் ஒன்று மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 4 பேர் இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் இன்னொரு கடற்கொள்ளை கும்பல் அங்கு வந்து, படகில் இருந்த 12 மீனவர்களை வங்கதேச கடல் பகுதிக்கு கடத்திச் சென்றது.
துப்பாக்கிச் சூடு பற்றி அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடற்கொள்ளையர்களுடன் சண்டையிட்டனர். அதில் 8 கடற்கொள்ளையர்கள்
இந்திய மீனவர்களிடம் சிக்கினர். அவர்களை மேற்குவங்கத்தின் கக்த்விப் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்திய மீனவர்கள் கடத்தப்பட்டது குறித்து உடனடியாக வங்கதேச அதிகாரிகளுக்கு இந்திய அரசு தகவல் தெரிவித்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. கடத்தப்பட்ட மீனவர்களை தேடும் பணியில் இருநாட்டு படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment