Sunday, January 29, 2012

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பாரிய பிரச்சினைகள் உருவாகக் கூடும்-அருண் தம்பிமுத்து!

Sunday, January 29, 2012
இலங்கை::மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங் களை வழங்குவதன் மூலம் பாரிய பிரச்சினைகள் உருவாகக் கூடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித் துள்ளார்.

13 ஆம் திருத்தச் சட்டமும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களும் இந்த நாட்டுக்கு அவசியமில்லை. பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் வடக்கு கிழக்கு சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால், அதனை யார் பொறுப்பு ஏற்பார்கள். தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினை மொழிப் பிரச்சினையாகும். மொழிப் பிரச்சினைக்கு துரித கதியில் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களும் மொழிப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர்.

மட்டக்களப்பில் பெயர்ப் பலகைகள் தமிழில் காணப்படுகின்றன. கச்சேரியில் ஒரு சிங்களவரேனும் கடமையாற்றவில்லை. வடக்கில் பெளத்த விஹாரைகள் அமைக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமத்தி வரும் குற்றச் சாட்டுக்களில் உண்மையில்லை.

கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி என்னை இணைப்பாளராக நியமித்துள் ளார் என அருண் தம்பிமுத்து சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.

No comments:

Post a Comment