Saturday, January 28, 2012
இளையான்குடி::தமிழக அரசின் கடன் சுமை ரூ.88 ஆயிரம் கோடி என தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழக அரசின் வரவு செலவு கணக்கின்படி சென்ற நிதியாண்டு வரை கடன் தொகை எவ்வளவு என்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கரும்புக்கூட்டத்தைச் சேர்ந்த சமுக ஆர்வலர் ஜோசப் பாத் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அவருக்கு தமிழக அரசின் சார்பு செயலாளர் மற்றும் பொது தகவல் அலுவலர் மூலம் கூறப்பட்ட பதில் தகவல் பின்வருமாறு
தமிழக அரசின் கணக்குகள் 31.03.2010 வரை மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. 31.03.2010ம் நாள் வரை தமிழ்நாட்டின் பொதுக்கடன் ரூ.88 ஆயிரத்து 882 கோடியே 52 லட்சம் ஆகும். இத்தொகை சந்தை கடன்கள், இந்திய ஆயுள் ஈட்டு வசதி கழகம், இந்திய பொது ஈட்டுறுதிக் கழகம், வேளாண்மை ஊரக வளர்ச்சி தேசிய வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஏனைய வங்கிகள், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனம், பல நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன், சிறுசேமிப்புக்கு வழங்கப்பட்ட சிறப்பு பிணையங்கள் மற்றும் பல கடன்கள் மூலமாகப் பெறப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசிடமிருந்து மட்டும் பெற்ற கடன்களும், முன்பணங்களும் ரூ.8 ஆயிரத்து 356 கோடியே 68 லட்சம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment