Saturday, January 28, 2012

பிலிப்பைன்ஸ் கப்பலால் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள்!

Saturday, January 28, 2012
இலங்கை::மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த ஆறு மீனவர்கள் பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 6ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைளுக்காக சென்றிருந்த இந்த மீனவர்கள் 11ஆம் திகதி கடலில் காணாமல் போயுள்ளனர்.

இந்த மீனவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கடற்றொழில் திணைக்களத்திடம் தொடர்புகொண்டு வினவியபோது, சிங்கப்பூர் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக காப்பாற்றப்பட்ட மீனவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment