Saturday, January 28, 2012
வில்லியனூர்::வில்லியனூர் அருகே பெரியபேட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மேடைப்பாடகரான இவர் கட்டிட வேலையும் செய்து வந்தார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு ஹேமநாதன் (வயது 3), புவனேஷ் (1 1/2) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அலமேலு சுய உதவிக்குழு செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அலமேலு தனது குழந்தைகளை தனது மாமியார் பத்மாவதியிடம் பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு பாங்கியில் பணம் செலுத்த புதுவைக்கு சென்றார். ஆனால் பத்மாவதி குழந்தைகளை ரமேசிடம் ஒப்படைத்துவிட்டு கரையாம்புத்தூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.
இதற்கிடையே ரமேசின் தம்பி மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த தேதி குறிப்பதற்காக ரமேசும், அவரது சித்தி ஆதவல்லியும் வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவிலில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது 2 குழந்தைகளையும் தங்களுடன் அழைத்து சென்றனர். அப்போது அய்யர் வர தாமதமானதால் குழந்தைகளை கோவில் வளாகத்தில் விளையாட விட்டு விட்டு அய்யருக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
குழந்தைகள் ஹேமநாதனும், புவனேசும் கோவில் சூலாயுதத்தில் இருந்த எலுமிச்சை பழங்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது கோவிலுக்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தைகளிடம் அன்பாக பழகினாள். புவனேசை தூக்கி முத்தமிட்டு கொஞ்சினாள். அறிமுகம் இல்லாத பெண் குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாளே என்று சந்தேகம் அடைந்து அந்த பெண்ணிடம் யார்? பெயர் என்ன என்ற விவரம் கேட்டார்.
அதற்கு அந்த பெண் தான் பொம்மையார்பாளையத்தை சேர்ந்தவர் என்றும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்ததாகவும் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்ததாகவும் கூறினாள்.
இதற்கிடையே கோவிலுக்கு அய்யர் வரவே ரமேசும், ஆதவல்லியும் அவரிடம் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த நல்ல நேரத்தை கேட்டனர். அய்யரும் ஒரு நாளில் தேதி மற்றும் நேரத்தை குறித்து கொடுத்தார்.
இதையடுத்து அய்யருக்கு தட்சணை கொடுத்துவிட்டு பார்த்த போது ஹேமநாதன் மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். புவனேசை காணவில்லை. மேலும் குழந்தையை கொஞ்சிய அந்த பெண்ணையும் காணவில்லை. இதனால் திடுக்கிட்டு போன ரமேஷ், ஹேமநாதனிடம் புவனேஷ் எங்கே என்று கேட்டார். அதற்கு புவனேசை அத்தை (கொஞ்சிய பெண்) தூக்கி கொண்டு கடைக்கு சென்று பிஸ்கட் வாங்கி வர சென்றதாக கூறினான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேசும், ஆதவல்லியும் அங்குள்ள கடை வீதிகளில் குழந்தையையும் அந்த பெண்ணையும் தேடினார்கள். ஆனால் எங்கும் இல்லை. இதற்கிடையே குழந்தையை அந்த பெண் கூடப்பாக்கம் ரோட்டில் தூக்கி சென்றதாகவும் அந்த பெண் ரமேசுக்கு உறவினராக இருக்கலாம் என கருதி அந்த பெண்ணிடம் எதுவும் கேட்கவில்லை என்று ரமேசின் பக்கத்து வீட்டை சேர்ந்த கொடிஅரசி என்பவர் ரமேசிடம் தகவல் கூறினார். இதையடுத்து கூடப்பாக்கம் ரோட்டில் தேடி சென்ற போது அந்த பெண் குழந்தையுடன் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தையை பறிகொடுத்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி அலமேலு ஆகியோர் குழந்தை கடத்தப்பட்டது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் உத்தரவின் பேரில் இன்ஸ் பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
குழந்தையை மீட்கும் பொருட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், செந்தில்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, ராஜன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த 4 தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டனர். கோவிலில் குழந்தைகளுடன் அந்த பெண் கொஞ்சிய போது ஒரு ரசீதை தவறவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. புதுவை அரசு ஆஸ்பத்திரி எதிரே நகராட்சிக்கு சொந்தமான நோயாளிகளின் உறவினர்கள் தங்குமிடத்தில் தங்கி இருந்ததற்கான ரசீது என்று தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தங்குமிடத்துக்கு சென்று விசாரித்த போது அந்த பெண் விபசார அழகி என்பதும், பல வாலிபர்கள் அவருடன் தொடர்பு வைத்துள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்த பெண்ணுடன் அரியாங்குப்பத்தை சேர்ந்த ஒரு வாலிபர் நெருங்கி பழகி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் அந்த பெண் திருக்கனூரில் தங்கி இருக்கலாம் என்று தகவல் தெரிவித்தனர். மேலும் அந்த பெண் திருமணமான சில நாட்களில் கணவரை விட்டு பிரிந்து விட்டதாகவும் விழுப்புரம் அருகே இருவேல்குடி கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே இருவேல்குடிக்கு அந்த பெண் சென்றிருக்கலாம் என கூறினார். ஆனால் போலீசார் அங்கு சென்று வந்த போது அந்த பெண் 2-வது கணவரையும் பிரிந்து சென்றதும் தெரியவந்தது.
இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் அருகே கிரண்குடி கிராமத்தில் அவரது தாத்தா அழகன் வீடு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிரண்குடியில் உள்ள அழகன் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு குழந்தையுடன் அந்த பெண் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் குழந்தை புவனேசை மீட்டனர். மேலும் அந்த பெண்ணை கைது செய்தனர். குழந்தையையும் அந்த பெண்ணையும் புதுவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்து மகிழ்ச்சியுடன் குழந்தையை பெற்றுக் கொண்டனர்.

No comments:
Post a Comment