Saturday, January 28, 2012

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு மிகச் சிறந்த முறையில் இடம்பெற்றன:புலம்பெயர் மக்கள் கவனத்தில் கொள்ளவெண்டும்!

Saturday, January 28, 2012
இலங்கை::சர்வதேச ஊடகங்களாலும், புலம்பெயர் மக்களாலும் பலதரப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் இலங்கை மீது சுமத்தப்பட்டு வந்தாலும், முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு நடவடிக்கைள் எந்தவித குறைப்பாடுகளுமின்றி மிகச் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள், இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களும், கைதுசெய்யப்பட்டவர்களும் ஆவார்கள். இவர்கள் அரசாங்கத்திற் கெதிராக புலிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தியவர்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் இவர்களுக்கு எந்தவித தண்டணையும் வழங்காது, அவர்களது எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு புனர்வாழ் நடவடிக்கையை மேற்கொண்டது.

இவர்களுக்கென பிரத்தியோகமான நலன்பரி நிலையங்களை அமைத்து அதில் அவர்களது அறிவு திறன் சார் அனைத்து திறமைகளையும் விருத்தி செய்யும் முகமாக பல கற்கைநெறிகளும், பயிற்சி நெறிகளும் அமுல்படுத்தப்பட்டன. இதில் ஆங்கில மொழி, தலைமைத்துவ பயிற்சி, சிறு வியாபாரங்களுக்கான முகாமைத்துவ பயிற்சி, கிளரிக்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள், கணணி தொழில்நுட்பம், மேசன், குழாய் திருத்தும் வேலைகள், தச்சு தொழில், கலைகள் மற்றும் கைத்தொழில்கள், இசை மற்றும் நடனம், உணவு தயாரித்தல் போன்றவற்றிக்கான தொழில் பயிற்சிகள் என பலதரப்பட்ட துறைகளில் இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப் புனர்வாழ்வுத் திட்டமானது, மிகச்சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதாவது இவர்கள் சமூகத்துடன் இணைக்கப்படும் காலப்பகுதியில் சுயதொழில்களை மேற்கொண்டு சமூகத்தில் உற்பத்தித்திறன் மிக்க உறுப்பினராக திகழ்வதற்கான வாய்பை ஏற்படுத்தும் வகையில் மிகச் சிறந்த முறையில் இப் புனவாழ்வு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதைத்தவிர யுத்தத்தின் காரணமாக தமது கல்வியை தொடர முடியாமல் இருந்தவர்களுக்கு தமது கல்வியை மீண்டும் தொடரும் வாய்பையும் இலங்கை அரசு இவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தது. இவர்கள் க.பொ.த(சா/த) மற்றும் க.பொ.த(உ/த) ஆகிய பரீட்சைகளிலும் தோற்றினர். கடந்த 2010 இல் க.பொ.த(சா/த) பரீட்சையில் 175பேர் தோற்றியதுடன் இதில் 38பேர் அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்திருந்தனர், க.பொ.த(உ/த) பரீட்சையில் 361பேர் தோற்றியதுடன் 222 பேர் அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்தனர். இவ்வாறு இவ் இளைஞர் யுவதிகளை அவர்களது சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ வைப்பதற்காகவே பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இராணுவத்தினரை பற்றி தப்பான அபிப்பிராயங்களை கொண்டிருந்த முன்னாள் புலி உறுப்பினர்கள், புனர்வாழ்வு நிலையங்களில் இராணுவத்தினர் நடந்துகொண்ட முறையில் இருந்து அவர்கள் தொடர்பான உண்மையான நிலையை அறிந்து கொண்டனர். இராணுவத்தினர் தமக்காக மேற்கொண்ட சேவைகளுக்காக முன்னாள் புலி உறுப்பினர்கள் தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சமூகத்தில் இணைக்கப்பட்ட இவர்கள் தமது குடும்பங்களுடன் கடந்த கால கசப்பான உணர்வுகளை மறந்து மிகவும் சந்தோசமாக வாழ்கின்றனர். அண்மையில் கொண்டாடப்பட்ட பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கில் பல நிகழ்வுகள் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிழக்கில் மூதூர் மற்றும் வாகறை பகுதியில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு, தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந் நிகழ்வின் போது இவர்கள் இராணுவத்தினர் சேவைக்காக அவர்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு முன்னாள் புலி உறுப்பினர்களாக இருந்து தற்போது சமூகத்துடன் இணைக்கப்ட்டுள்ள இவ் இளைஞர் யுவதிகளும், தமிழ்மக்களும் மிகவும் சந்தோசமாக தமது வாழ்வைகொண்டு நடாத்தி வருகின்றனர். இவ்வாறிருக்கையில் இலங்கையின் உண்மை நிலவரத்தை பற்றி அறியாத பல சர்வதேச சமூகத்தினர் இலங்கை அரசாங்காத்தை பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதன் மூலம் இம் மக்களது நிம்மதியை மீண்டும் இல்லாமல் போய்விடுமோ? என்ற பீதி இவர்களுக்கிடையே நிலவுவதை புலம்பெயர் மக்கள் கவனத்தில் கொள்ளவெண்டும்.

No comments:

Post a Comment