Saturday, January 28, 2012

ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : ஸ்டாலின்!

Saturday, January 28, 2012
செம்பனார்கோவில்::முதல்வர் ஜெயலலிதா என் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். நாகை மாவட்டம் செம்பனார்கோவில் திமுக பிரமுகர் கபிலன் இல்ல திருமண விழா நாளை மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இன்று செம்பனார்கோவில் வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி தொடர்ந்து ஏறிக் கொண்டே உள்ளது. அதேபோல் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது. இதைப் பற்றியெல்லாம் அதிமுக அரசுக்கு கவலையில்லை.

முன்பு எதிர்க்கட்சியினர் மீது முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். தற்போது அதிமுகவிலேயே தனக்கு பிடிக்காதவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறார். என் மீதும் புதிதாக அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தைத்தான் நான் கூறினேன். இந்த வழக்கில் வாய்தா வாங்க மாட்டேன். சட்டப்படி சந்திப்பேன். தற்போது துக்ளக் ஆட்சி நடந்து வருகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment