Sunday, January, 01,2012
சென்னை::2012 புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் பொதுமக்கள் கொண்டாடினார்கள். புத் தாண்டையொட்டி கோவில் களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். நள்ளிரவிலேயே குளித்து புத்தாடை அணிந்து ஏராளமானவர்கள் கோவில்களுக்கு சென்றனர்.
திருவேற்காடு கருமாரியம் மன் கோவில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட் டது. கோ பூஜையும் அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை வெள்ளி நாணய அலங்காரம், பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரம் 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங் காரம் நடக்கிறது.
மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.
சுவாமி மற்றும் அம்பாளுக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு தங்க காசு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தியாகராய நகரில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலை 2.30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி கோவிலில் அதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
மடிப்பாக்கம் நவசக்தி காமாட்சி அம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு நாணயங்களால் குபேர லட்சுமி பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மாலையில் சிறப்பு நவாவர்ண பூஜை நடக்கிறது.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் சொர்னாபிஷேகம் நடந்தது. காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், குமரகோட்டம், வரதராஜ பெரு மாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில் உள் ளிட்ட அனைத்துக்கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியில் உள்ள குரு பகவான் கோவிலான தட்சிணாமூர்த்தி கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். அனைத்து கோவில்களும் இன்று பகல் முழுவதும் திறந்து இருக்கும். பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து கோவில்களிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்...
திருவள்ளூர் காஞ்சி மாவட்டத்தில் கோயில் சர்ச்சில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் பக்தர்கள் குவிந்தனர்!
சென்னை : திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கோயில், தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. விசேஷ அலங்காரத்தில் இருந்து முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருத்தணி அருகே மத்தூர் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர். பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். கவுடி நினைவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். நள்ளிரவு 11.30 மணிக்கு டீக்கன் சாலமோன், சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். 12 மணிக்கு ஆயர் ஏ.ரத்தினசாமி, புதிய வருட ஆராதனை நடத்தினார். அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.
புழல் திருமூலநாத சுவாமி கோயில், சுப்பிரமணியசாமி கோயில், சிஎஸ்ஐ சர்ச், புனித அந்தோணியார் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்தினர். காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பர நாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், அஷ்டபுஜபெருமாள் கோயில், யதோர்க்காரி பெருமாள் கோயில்களில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடத்தினர். காஞ்சிபுரம் சிஎஸ்ஐ சர்ச்சில் சிறப்பு திருப்பலி நடந்தது. அங்கு வந்த பக்தர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். செங்கல்பட்டு புனித சூசையப்பர் ஆலயம், சிஎஸ்ஐ சர்ச், கல்பாக்கம் அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

No comments:
Post a Comment