Sunday, January 29, 2012
சென்னை::'இந்து' ராம் மீதான நிலஅபகரிப்பு புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி. பழனிச்சாமியை திங்கள்கிழமையன்று நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அழைத்துள்ளது.
ராம் மீது, போலீஸ் டி.ஜி.பி.யிடமும், சென்னை போலீஸ் கமிஷனரிடமும் 6 புகார் மனுக்களை பழனிச்சாமி கொடுத்திருந்தார்.
கோவையில் செயல்படும் சேரன் குரூப் கம்பெனிகளின் இயக்குநராகவும் உள்ள பழனிச்சாமி திருச்செங்கோடு தொகுதி எம்.பி.யாகவும், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியவர்.
புகார் என்ன?
சென்னை கிழக்கு கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அருகே சுமார் 400 ஏக்கர் நிலத்தை 2004-ம் ஆண்டு பழனிச்சாமிக்கு சொந்தமான சேரன் குரூப்ஸ் வாங்கியது.
பழனிச்சாமி வாங்கிய நிலம் இந்து ஆங்கில நாளிதழின் துணை நிறுவனங்களான ஸ்போர்ட்டிங் பாஸ்ட் (ஐ)லிமிடெட் நிறுவனத்துக்கும் மற்றும் இந்து கார்ஸ் நிறுவனத்துக்கும் சொந்தமானதாகும். அப்போதைய மதிப்பீட்டின்படி ரூ.30 கோடிக்கு இந்த நிலத்தை பழனிச்சாமி வாங்கினார்.
நில மதிப்பு பல நூறு கோடியாக உயர்ந்ததையடுத்து இந்து குழும நிறுவனங்கள் அதே நிலத்தை ரூ30 கோடிக்கு திருப்பிக் கேட்டது என்பது பழனிச்சாமியின் புகார்.
நிலத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த தம்மை காவல்துறை உதவியோடு இந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் மிரட்டினர் என்றும் ஆவணங்களை கொள்ளையடித்தனர் என்றும் பழனிச்சாமி புகார் கூறியுள்ளார்.
போலி ஆவணங்கள் மூலம் தமது நிலம் அபகரிக்கப்பட்டுவிட்டதாகவும் பழனிச்சாமி குற்றம்சாட்டியிருந்தார். மேலும் பொய்வழக்கில் தம்மை சிறைக்கு அனுப்பினர் என்பதும் பழனிச்சாமியின் புகார்.
இதனை ராம் மறுத்திருந்த நிலையில் நாளை பழனிச்சாமியிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
விசாரணையின் போது நிலம் தொடர்பான முக்கிய ஆவணங்களை போலீஸில் ஒப்படைக்க இருப்பதாக பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment