Sunday, January 29, 2012

காணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை கிழக்கு மாகாணசபையும் கோருகின்றது?பிள்ளையான்!

Sunday, January 29, 2012
இலங்கை::காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குமாறு கிழக்கு மாகாண சபையும் கோருகின்றது என ஆங்கிலஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதென கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்டஉறுப்பினர்கள் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

இந்தத்தீர்மானத்தின் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காணிஅதிகாரங்கள் பகிரப்படாமையானது காணிகளுக்கு மேல் இருக்கும் கட்டடங்ளை மட்டும் நிர்வாகம்செய்வதற்கு அதிகாரமளிக்கும் ஓர் நிலையாகவே கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புகையிரதத்திணைக்களம், பாதுகாப்புப் படையினர், வனப்பாதுகாப்பு திணைக்களம், மஹாவலிஅபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சுற்றுலாச் சபை ஆகியனவே கிழக்கு மாகாணத்தின் அநேககாணிகளை உரிமை கோருகின்றன.

சுற்றுலாத்துறையைஅபிவிருத்தி செய்யும் நோக்கில் கிழக்கு மாகாணத்தின் பல காணிகள்சுவீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைகளுக்குகாவல்துறை அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை,கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தற்போது சுவிட்சர்லாந்து விஜயமொன்றைசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர்நாடு திரும்பியதன் பின்னர் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரைமுதலமைச்சர் சந்திரகாந்தன் உள்ளிட்ட தரப்பினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

No comments:

Post a Comment