Sunday, January 29, 2012
சென்னை: தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கும் லேப்டாப் வாங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதேபோல அண்ணா மற்றும் எம்ஜிஆர் சமாதிகளை மேம்படுத்தவும் அவர் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
முதல்வர் ஜெயலலிதா 11.08.2011 அன்று 2011-12 ஆம் ஆண்டைய திருத்திய வரவு, செலவு திட்டத்திற்கான பொது விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ஒரு மடிக்கணினி வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தார்.
மேலும் நடப்பாண்டில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 1 கோடியே 75 லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கவும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், 2011-12 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியான 2 கோடியில் வரையறுக்கப்படாத நிதியான 87 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து தங்களின் தேவைக்கேற்ப தலா ஒரு புதிய மடிக்கணினி (லேப்-டாப்) அல்லது கணினி (கம்ப்யூட்டர்) பிரிண்டர் மற்றும் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்பு வசதி (பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு) ஆகியவற்றை ஒருமுறை மட்டும் வாங்கிக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்து ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, சட்டமன்ற உறுப்பினர்கள் மேலும் பல மேலான தகவல்களுடன் விவாதங்களில் பங்கேற்க உதவும்.
சமாதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு!
இதேபோல தமிழக அரசு வெளியிட்டுள்ள இன்னொரு செய்திக்குறிப்பில்,
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் என்றார் மகாகவி பாரதியார். அதுபோல் தமிழக மக்கள் உள்ளங்களில் இன்றளவும் வாழுகின்ற மாபெரும் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா எம்.ஜி.ஆர் ஆவர்.
பேரறிஞர் அண்ணா தனது இதயக்கனி என்று சொன்னது முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரைத்தான். எனவே, இவ்விரண்டு தலைவர்களின் நினை விடங்களும் அருகருகே அமைந்திருப்பது இயற்கையேயாகும். இவர்களது நினைவிடத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
மறைந்த தலைவர்களின் நினைவை போற்றும் வகையில் அவர்களின் நினைவிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதாலும், நல்லதொரு சுற்றுசூழல் இருக்கவேண்டும் என்பதாலும், கடந்த ஆகஸ்ட்- செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டதொடரில், 2011-12 ஆம் ஆண்டு செய்தி விளம்பரத்துறை மானியக் கோரிக்கைக்களுக்கான விவாதத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் பேரறிஞர் அண்ணா மற்றும் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவகங்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்படி பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தை புதுப்பொலிவுடன் புனரமைத்திட 1 கோடியே 20 லட்சம் ரூபாயும், பாரத ரத்னா எம்.ஜி.ஆர். நினைவிடத்தை புதுப்பொலிவுடன் புனரமைத்து எழிலூட்ட 4 கோடியே 30 லட்சம் ரூபாயும், அவரது நினைவிடத்தின் முகப்புத் தோற்றத்தை மாற்றி மைத்து, முன்புறத்தில் சுற்றுசுவர் கட்டுவதற்காக 3 கோடியே 40 லட்சம் ரூபாயும் என மொத்தம் 8 கோடியே 90 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த நினைவிடங்கள் புதுப்பொலிவுடன் விளங்கும் என்று தெரிவித்துள்ளது தமிழக அரசு.

No comments:
Post a Comment