Sunday, January 29, 2012

28 நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 156 பேர் உயிரிழப்பு!

Sunday, January 29, 2012
இலங்கை::கடந்த 28 நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 156 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில் 15 பாரிய வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஐந்து வருடங்களில் அதிகளவிலான வாகன விபத்துக்கள் குறித்த காலப் பகுதியில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த விபத்துக்கள் ருவன்வெல்ல,ராகம,வத்தளை, மீரிகம, நீர்கொழும்பு,கொச்சிக்கடை, எப்பாவெல, குருநாகல், குளியாப்பிட்டி, அக்குரஸ்ஸ, மாத்தளை, அஹூங்கல்ல, மஹியங்கனை மற்றும் பயாகல ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment