Sunday, January 29, 2012

திமுகவில் பணியாற்ற இளைஞர்கள் ஆர்வம் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Sunday, January 29, 2012
கருர்::இளைஞர்களின் ஆர்வம் உள்ளவரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது என மு.க.ஸ்டாலின் கூறினார்.கரூர் பிரேம் மஹாலில் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக இளைஞரணி நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
இந்த நிகழ்ச்சி முதலில் காஞ்சிபுரத்தில் ஆரம்பித்து கிருஷ்ணகிரி, வேலூர், கரூர் என தொடர்ச்சியாக நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஆட்சியில் நாம் இல்லையே, எந்தளவுக்கு இளைஞர்கள் வருவார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் ஆட்சியில் இருந்தால்கூட இந்தளவுக்கு வந்திருக்க மாட்டார்கள். திமுகவில் பணியாற்ற இளைஞர்கள் காட்டும் ஆர்வத்தை பார்க்கும்போது இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. திமுகவில் எத்தனை துணை அமைப்புகள் இருந்தாலும் முதலாவது அணி இளைஞர் அணிதான்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில் மாநில துணை அமைப்பாளர்கள் மா.சுப்பிரமணியன், எம்.பி. சுகவனம், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், சுபா சந்திரசேகர், சம்பத், எம்எல்ஏ கே.சி.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment