Saturday, January 28, 2012
இம்பால்::உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்கி மார்ச் 3-ந்தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனவரி 30-ந்தேதியும், கோவாவில் மார்ச் 3-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.
60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக 2,357 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் 12,967 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி 60 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 47 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மணிப்பூர் மக்கள் கட்சி, மக்கள் ஜனநாயக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
பாரதீய ஜனதா, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 17 லட்சத்து 40 ஆயிரத்து 576 பேர் வாக் களிக்கிறார்கள். காலையில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்க வந்தனர்.
முதல்-மந்திரி ஒக்ராம் இபோபி சிங் போட்டியிடும் தொபால் தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது. இங்கு பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். குடியரசு தினத்தன்று வெடிகுண்டு வீச்சு சம்பவமும் நடந்தது. இம்பாலின் மேற்கு பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயம் அடைந்தார்.
இதே போல் காக்வாவில் சக்தி வாய்ந்த 2 குண்டுகள் வெடித்தது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களால் இன்றைய ஓட்டுப்பதிவின்போது பலத்த பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. 60 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டு இருந்தனர். மணிப்பூர் மாநில முதல்- மந்திரி ஒக்ராம் இபோபிசிங் 2 முறை தேர்தலில் வெற்றி பெற்று 2002-ம் ஆண்டு முதல் முதல்-மந்திரியாக இருக்கிறார்.
தற்போது 3-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதே சமயம் எதிர்க்கட்சிகள் இந்தமுறை ஆட்சியை கைப்பற்ற முனைப்புடன் உள்ளன. இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மணிப்பூரில்தான் தீவிரவாத செயல்கள் தலைதூக்கி உள்ளன. காங்கிரசே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியும், இந்த பிரச்சினையை முன் வைத்தும் எதிர்க்கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டன.
அதை நிரூபிப்பதுபோல் தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இது இன்றைய ஓட்டுப்பதிவில் பிரதிபலிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் வைக்கப்படுகிறது. மார்ச் 6-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

No comments:
Post a Comment